/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு
/
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு
ADDED : ஆக 17, 2025 02:18 AM
மோகனுார், ஆடி கிருத்திகையையொட்டி, மோகனுார் அடுத்த கதிர்மலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
காலை, 8:00 மணிக்கு, உற்சவர் கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம், பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
அங்கு, மூலவருக்கு பால் மற்றும் தீர்த்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
* மோகனுார், காந்தமலை பாலசுப்ர
மணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, தங்க கவசத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.