/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புரட்டாசி 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு
/
புரட்டாசி 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு
புரட்டாசி 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு
புரட்டாசி 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு
ADDED : செப் 28, 2025 01:51 AM
நாமக்கல்:புரட்டாசி, இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீபங்காரு பெருமாள் கோவிலில், சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கும், நேற்று காலை, 6:00 மணிக்கு இளநீர், பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள துர்கை அம்மனுக்கு, நவரத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது.
இதேபோல், நாமக்கல் மலைக்கோட்டையின் மேல் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், காலை, 7:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அன்னதானம் வழங்கினர்.
* மல்லசமுத்திரம், சந்தைப்பேட்டை அருகேயுள்ள பழமை வாய்ந்த கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகுசவுந்தரராஜ பெருமாள் கோவிலில், மூலிகை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது.
சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சுவாமி தரிசனம் செய்தனர். சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறத்தில் அமைந்துள்ள சென்றாயபெருமாள் கோவிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடந்தன.