/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோமேஸ்வரர், வருதராஜ பெருமாள் கோவில் தேர் நிலைகளுக்கு பூஜை
/
சோமேஸ்வரர், வருதராஜ பெருமாள் கோவில் தேர் நிலைகளுக்கு பூஜை
சோமேஸ்வரர், வருதராஜ பெருமாள் கோவில் தேர் நிலைகளுக்கு பூஜை
சோமேஸ்வரர், வருதராஜ பெருமாள் கோவில் தேர் நிலைகளுக்கு பூஜை
ADDED : பிப் 14, 2025 07:21 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் உள்ள பெருமாள், சோமேஸ்வரர் கோவில் தேர் நிலைகள் புதுப்பிக்கப்பட்டு, மாசி மாத திருவிழாவிற்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
சேந்தமங்கலம் வருதராஜ பெருமாள், சோமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தேர்த்திருவிழா நடக்கிறது. விழா முடிந்த பிறகு தேர்களை நிறுத்துவதற்காக, கடைவீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, 100ஆண்டுகள் பழமையான தேர் நிலை இருந்தது. இது பழுதடைந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இரண்டு தேர்நிலைகளையும் புதுப்பிக்கும் பணி நடந்தது.
இந் நிலையில், வருதராஜபெருமாள் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீவிக்னசேசனாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட இரு தேர் நிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மாசி மாத திருவிழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. பொட்டணம், மின்னாம்பள்ளி, செல்லப்பம்பட்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.