/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆனி பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை
/
ஆனி பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை
ADDED : ஜூன் 24, 2025 01:56 AM
ப.வேலுார்,
ஆனி பிரதோஷத்தையொட்டி, ப.வேலுார் எல்லையம்மன் கோவிலில் நானுாறு ஆண்டு பழமையான ஏகாம்பரேஸ்வரருக்கு, சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. பிரதோஷ விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் ப.வேலுார் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது.
ப.வேலுாரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பாண்டமங்கலம் புதியகாசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஷ்வரர் கோவில், பில்லுார் விரட்டீஸ்வரர் கோவில், பொத்தனுார் காசி விஸ்வநாதர் கோவில், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.