/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
/
பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 18, 2025 01:42 AM
நாமக்கல், 'பால் உற்பத்தி மற்றும் கோழி, கால்நடை வளர்ப்பில் ஊக்கத்தொகையுடன் திறன் பயிற்சி பெற, விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 24ல் தொடங்கி, 25 நாட்களுக்கு, சிறப்பு திறன் பயிற்சி நடக்கிறது. முதலில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. தொடர்ந்து, பால் உற்பத்தி தொழில், செம்மறியாடு வளர்ப்பு, ஜப்பானிய காடை வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளிட்ட, ஐந்து தலைப்பில், வெவ்வேறு நாட்களில், ஒரு மாதத்திற்கு, 25 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதி உதவியுடன், 'வெற்றி நிச்சயம்' என்ற திட்டத்தில், சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, விரிவாக்க கல்வி இயக்கத்தின் மேற்பார்வையில், வேலையில்லாத இளைஞர்களுக்கு கால்நடை வளர்ப்பில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், 18 முதல், 35 வயதுடையவர்கள் கலந்துகொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பண்ணை மகளிர், விவசாய ஊரக இளைஞர்கள், படிப்பு முடித்து வேலையில்லாத மாணவ, மாணவியர், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
இப்பயிற்சியில் சேர, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 25 நாட்கள் முறையாக பயிற்சி முடித்தவர்களுக்கு, பயணப்படியாக, 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/1481 என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த தகுதியான, 25 நபர்களை மட்டும் தேர்வு செய்து, ஒவ்வொரு பயிற்சியும் வழங்கப்படும். விபரங்களுக்கு, 04286--266345, 266650, 9943008802 ஆகிய தொலைபேசி, மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.