/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்சியில் வாலிபர் அடித்து கொலை மோகனுார் போலீசுக்கு வழக்கு மாற்றம்
/
திருச்சியில் வாலிபர் அடித்து கொலை மோகனுார் போலீசுக்கு வழக்கு மாற்றம்
திருச்சியில் வாலிபர் அடித்து கொலை மோகனுார் போலீசுக்கு வழக்கு மாற்றம்
திருச்சியில் வாலிபர் அடித்து கொலை மோகனுார் போலீசுக்கு வழக்கு மாற்றம்
ADDED : ஆக 16, 2025 02:22 AM
மோகனுார், வாலிபர் கொலை குறித்து, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மோகனுார் போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் பாலச்சந்திரன், 30; இவரது நண்பர் ரமேஷ், 35. இருவரும், 2024 அக்., 27ல், நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, ஒருவந்துார்புதுாரில் தேங்காய் குடோனில் பணியாற்றும், தேனி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், 21, புவனேஷ், 29, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்த காசி, 28, மருதமுத்து, 30, பிரவின்குமார், 30, பிரபாகர், 25, சின்னையா, 24, கணேசன், 43 ஆகிய, எட்டு பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது, இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், எட்டு பேரும் சேர்ந்து, இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரமேசையும், சீத்தப்பட்டி பகுதியில் பாலச்சந்திரனையும் துாக்கி வீசினர். இதில், பாலச்சந்திரன் இறந்துவிட்டார். இதுகுறித்து, காட்டுப்புத்துார் வி.ஏ.ஓ., பாரதி அளித்த புகார்படி, காட்டுப்புத்துார் போலீசார், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரித்தனர். அதில், சம்பவம் நடந்த இடம், நாமக்கல் மாவட்டம், மோகனுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒருவந்துார் பகுதி என்பதால், மோகனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு, வழக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.