/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கலை கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா
/
அரசு கலை கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா
ADDED : ஜன 03, 2025 01:13 AM
நாமக்கல், ஜன. 3-
அரசு பொது நுாலகத்துறை, மாவட்ட நுாலக ஆணைக்குழு மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி சார்பில், நாமக்கல்லில் இளைஞர் இலக்கிய திருவிழா துவங்கியது.
நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில் நடந்த தொடக்க விழாவுக்கு முதல்வர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட நுாலக அலுவலர் தேன்மொழி, மைய நுாலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார், மாவட்ட மைய நுாலக முதல்நிலை நுாலகர் சக்தி வேல் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியின், முதல் நாளான நேற்று மாணவ, மாணவியருக்கான இரண்டு நிமிட பேச்சு போட்டி, நுால் அறிமுக போட்டி நடந்தது. இன்று (ஜன.,3) இலக்கிய வினாடி வினா, உடனடி ைஹக்கூ உருவாக்கம் போட்டி நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு போட்டிகள் நடக்கிறது. வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு முதல் பரிசு, 5,000. இரண்டாம் பரிசு, 4,000, மூன்றாம் பரிசு, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.