/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியிருப்பு பகுதியில் டூவீலர் திருடிய வாலிபர்
/
குடியிருப்பு பகுதியில் டூவீலர் திருடிய வாலிபர்
ADDED : ஜூலை 21, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளைம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில், நேற்று மதியம், 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்றார்.
அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை திருட திட்டமிட்டார். பின், சுற்று முற்றும் பார்த்த அவர், டூவீலரை திருடிக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றார். இந்த காட்சி அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது. வீடியோ பதிவை வைத்து, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.