sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பல ஆண்டாக புதர்மண்டி கிடந்த மயானத்தை சீரமைக்கும் இளைஞர்கள்: மக்கள் வரவேற்பு

/

பல ஆண்டாக புதர்மண்டி கிடந்த மயானத்தை சீரமைக்கும் இளைஞர்கள்: மக்கள் வரவேற்பு

பல ஆண்டாக புதர்மண்டி கிடந்த மயானத்தை சீரமைக்கும் இளைஞர்கள்: மக்கள் வரவேற்பு

பல ஆண்டாக புதர்மண்டி கிடந்த மயானத்தை சீரமைக்கும் இளைஞர்கள்: மக்கள் வரவேற்பு


ADDED : ஆக 11, 2025 06:20 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பெரியமணலி பஞ்.,க்கு உட்பட்ட குமரவேலிபாளையம் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானம் பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில், புதர் மண்டி கிடக்கிறது. விஷ ஜந்துக்களின் கூடா-ரமாக மாறியதால், அப்பகுதி மக்கள் மயானத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, மாவட்ட நிர்வாகம், பி.டி.ஓ., அலுவலகம், பஞ்., நிர்வாகத்திற்கு பலமுறை புகாரளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, அப்பகுதி இளை-ஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன-மான சர்வதேச உரிமை கழகம் இணைந்து, முட்-புதர்களை அகற்றி பராமரிப்பு பணியில் ஈடுபட்-டுள்ளனர்.

இதுகுறித்து, தன்னார்வலர்கள், தொண்டு நிறு-வன இளைஞர்கள்

கூறியதாவது: எங்கள் கிராம பகுதியில் உள்ள மயானம், பல ஆண்டுகளாக புதர்மண்டி பொது-மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. அவற்றை சீரமைக்க வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்-வதேச உரிமை கழகத்தின் மூலம், அப்பகுதி இளைஞர்கள் இணைந்து பொதுமக்கள் பயன்ப-டுத்தும் வகையில், மயானத்தை சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்-டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சர்வதேச உரிமைக்கழக தலைவர் மோசஸ் செல்லதுரை, பொதுச் செயலாளர் ரவிக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா, நாமக்கல் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us