sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோத்தகிரி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் சர்ச்சை

/

கோத்தகிரி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் சர்ச்சை

கோத்தகிரி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் சர்ச்சை

கோத்தகிரி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் சர்ச்சை


UPDATED : ஜூலை 15, 2011 01:47 AM

ADDED : ஜூலை 14, 2011 10:06 PM

Google News

UPDATED : ஜூலை 15, 2011 01:47 AM ADDED : ஜூலை 14, 2011 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : 'கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உள்ள சர்ச்சைக்கு தீர்வு காண்பதுடன், உடனடியாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பேரூராட்சி சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றது. இங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, விரைவில் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர வாய்ப்புள்ளது. கோத்தகிரி நகரில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகையுடன், வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. கடந்த காலங்களில் நகரில் அடிப்படை வசதிகள் கூடுமானவரை செய்திருந்தாலும், முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக, கோத்தகிரி மார்க்கெட் சாலை மற்றும் ஜீப் திடலில், அனுமதியில்லாத ஆக்கிரமிப்புகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், மக்கள் மற்றும் வாகனங்கள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தவிர, பள்ளி நேரங்களில் மாணவ,மாணவியர் கடும் அவஸ்தைக்கு உள்ளாகுகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில், 'அனுமதியில்லாத ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்,' என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், 'குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு செய்த கடை உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றவேண்டும்; இல்லையெனில் போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்படும்' என, இருமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இருப்பினும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில், 'ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது,' என, மாவட்ட கலெக்டரிடம் சில வியாபாரிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதற்கு சில கவுன்சிலர்களும் ஆதரவாக செயல்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தை பொறுத்தமட்டில், 'ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதிக்கப்படுவோருக்கு மார்க்கெட் பகுதியில் கடை வழங்க முடிவெடுக்க உள்ள நிலையில், மாவட்ட கலெக்டரிடம் இருந்து 'கிரீன் சிக்னல்' வராதது ஆக்கிரமிப்புகளை அகற்ற தடையாக உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் விரைவில் உத்தரவு வழங்கினால் பிரச்னைகள் குறையும்.






      Dinamalar
      Follow us