/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்களால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் இயக்க சிரமம்
/
முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்களால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் இயக்க சிரமம்
முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்களால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் இயக்க சிரமம்
முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்களால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் இயக்க சிரமம்
ADDED : ஜூலை 25, 2011 11:03 PM
ஊட்டி : ஊட்டி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து லோயர் பஜார் சாலையில் முறையின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது இங்கு கோடப்பமந்து கால்வாயில் புதிய பாலம் கட்டப்பட்டது.
இந்த இடத்தில் இருந்து லோயர் பஜார் சாலையில் நடைபாதையை ஒட்டிய 'பார்க்கிங்' பகுதியில் சில வாடகை வாகனங்கள் முறையின்றி நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், நடைபாதையில் பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு வாகனங்களை நடைபாதையிலும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் பாதசாரிகள் பெரும்பாலும் சாலைகளிலேயே நடந்து செல்கின்றனர்.சமீப காலமாக பஸ் ஸ்டாண்ட் அருகே அரசின் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுகிறது. இந்த வாகனத்தின் முன்புறத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி பூட்டிவிட்டு டிரைவர்கள் சென்று விடுகின்றனர். இதனால் அவசர காலத்தில் வாகனங்களை எடுக்க முடியாததால் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க அவசரமாக செல்ல வேண்டிய நிலையில், இதுபோன்ற காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டு சம்மந்தப்பட்ட நோயாளி பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து காரணம் கேட்டால் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து போலீசாரும் இதனை கண்டும் காணாமல் சென்று விடுவதால், இங்கு வாகனங்கள் முறையின்றி ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. எனவே, போலீசார் வாகனங்களை முறைபடுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

