/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதல்வர் முகாம் மனுக்கள் குவிந்தன
/
முதல்வர் முகாம் மனுக்கள் குவிந்தன
ADDED : ஆக 03, 2024 05:38 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள், தங்களுடைய பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 950 மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.
பிளிச்சி ஊராட்சி,மத்தம்பாளையம் சமுதாய நலக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, பட்டா, சிட்டா மாற்றம் செய்தல், கலைஞரின் கனவு இல்லம், குடிநீர் பிரச்னை, கான்கிரீட் சாலை, தெருவிளக்கு மற்றும் புதிய வடிகால் அமைத்தல், புதிய மின் இணைப்பு மற்றும் மின் கம்பம் அமைத்தல், வேளாண்துறை, எரிசக்தி துறை, நுகர்வோர் பாதுகாப்பு, வீட்டு வசதி துறை, மதுவிலக்கு துறை,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன், மருத்துவம், கால்நடை பராமரிப்பு, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்துறை, தொழிலாளர் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், பொதுமக்கள், 950 மனுக்களை அளித்தனர்.
நிகழ்ச்சியில், கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன், வடக்கு தாசில்தார் மணிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.