/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
1 லட்சத்து 76 ஆயிரம்... ஓட்டுகள் வித்தியாசம்! ராஜாவை குறி வைத்த லோகேஷ்

ADDED : ஏப் 01, 2024 01:59 AM
கூடலுார்: நீலகிரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை, கூடலுார் பகுதியில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி பேசினார்.
கூட்டத்தில், லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசுகையில், ''எனது அப்பா, 40 ஆண்டு காலம் அ.தி.மு.க.,வில் இருக்கிறார்.
எனது மாமனார் அருணாசலம் எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். நான், அ.தி.மு.க.வின் அடுத்த தலைமுறை தொண்டன்.
நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி உறுதியாகி உள்ளது. நான், 1.76 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். முதுமலையில், இரவு நேர போக்குவரத்து தடையால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நான் வெற்றி பெற்றால், தொரப்பள்ளி முதல் கர்நாடக மாநிலம் மேல் கம்மநள்ளி வரை மேல்மட்ட சாலை அமைத்து பிரச்னைக்கு தீர்வு காண்பேன்,'' என்றார்.
அப்போது அங்கிருந்த தொண்டர்கள், 'அது சரி... ஒரு லட்சத்து 76 ஆயிரம் என, குறிப்பிட்டு சொல்றாரே... என்ன '2ஜி'யை ஞாபகப்படுத்தி, தி.மு.க., வேட்பாளர் ராஜாவை குறி வைக்கிறாரோ?' என சந்தேகம் கிளப்பினர்.