/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அப்பர்பவானி அணையில் இருந்து பில்லுாருக்கு 10 அடி தண்ணீர் வினியோகம்
/
அப்பர்பவானி அணையில் இருந்து பில்லுாருக்கு 10 அடி தண்ணீர் வினியோகம்
அப்பர்பவானி அணையில் இருந்து பில்லுாருக்கு 10 அடி தண்ணீர் வினியோகம்
அப்பர்பவானி அணையில் இருந்து பில்லுாருக்கு 10 அடி தண்ணீர் வினியோகம்
ADDED : மே 05, 2024 11:28 PM
ஊட்டி:மஞ்சூர் அப்பர்பவானி அணையில் இருந்து பில்லுாருக்கு, 10 அடி வரை தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது.
மஞ்சூர் அருகே உள்ள அப்பர் பவானி அணை, 210 அடி கொண்டதாகும். மாவட்டத்தில் பெரிய அணையாக கருதப்படும் இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி மின் நிலையத்திற்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
வறட்சி காரணமாக அணையில் இருந்த தண்ணீர் படிப்படியாக குறைந்தது. 60 அடி வரை இருப்பிலிருந்த தண்ணீர், கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தால் கடந்த சில நாட்களாக அப்பர் பவானி அணையிலிருந்து டனல் வழியாக பில்லூருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. 10 அடி வரை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டதால் தற்போது, 50 அடி வரை தண்ணீர் இருப்பில் உள்ளது.