/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தபால் ஓட்டுக்கள் பெறுவதில் குளறுபடி பயனில்லாமல் போன 100 சதவீத விழிப்புணர்வு
/
தபால் ஓட்டுக்கள் பெறுவதில் குளறுபடி பயனில்லாமல் போன 100 சதவீத விழிப்புணர்வு
தபால் ஓட்டுக்கள் பெறுவதில் குளறுபடி பயனில்லாமல் போன 100 சதவீத விழிப்புணர்வு
தபால் ஓட்டுக்கள் பெறுவதில் குளறுபடி பயனில்லாமல் போன 100 சதவீத விழிப்புணர்வு
ADDED : ஏப் 18, 2024 04:52 AM
குன்னுார் : குன்னுாரில் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில், 85 வயதை கடந்த முதியோர் சிரமமின்றி ஓட்டுக்கள் செலுத்தவும், அனைத்து துறை அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தேர்தல் நேரத்தில் பணியாற்றுவதாலும் தபால் ஓட்டுகள் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதே நேரத்தில், 100 சதவீத ஓட்டளிக்க பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், பலருக்கும் தபால் ஓட்டுக்கள் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் தற்போது விண்ணப்பித்த பலருக்கும் தபால் ஓட்டுக்கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் கூடுதலாக, 2 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், 85 வயது கடந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுக்கள் படிவம் அளித்தும், தபால் ஓட்டளிக்க பெயர் இடம் பெறாமல் போயுள்ளது.
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில் மனோகரன் கூறுகையில், ''தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்படுகிறது.
சமீபத்தில் விண்ணப்பித்த கோடேரி கிராமத்தை சேர்ந்த மிச்சி என்ற 90 வயது முதியவருக்கு தபால் போட்டு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் இதே பகுதியில் விண்ணப்பம் செய்யாத பெயருக்கு தபால் போட்டு போட விண்ணப்பம் வந்துள்ளது.
அந்தத்த பகுதி 'பி.எல்.ஓ.,' மூலம் பெறப்பட்ட புதிய தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பங்களுக்கு தேர்தல் தாசில்தார் அலுவலகங்களில் உரிய முறையில் பதிவு செய்யாததால் தோல்வி ஏற்படுகிறது.
சென்னை தேர்தல் ஆணைய உதவி மையத்தை தொடர்பு கொண்டபோது, ஊட்டி ஹெல்ப் லைன் மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால், 'ஊட்டியில் இந்த புகார்களை பதிவு செய்ய முடியாது; வாக்காளர் தகவல் மட்டுமே பெற முடியும்,' எனவும் தெரிவித்து விட்டனர். இது போன்ற குளறுபடிகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

