ADDED : ஆக 02, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டியில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்ற, 123 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார், எருமாடு பகுதிகளில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சி.பி.ஐ., - சி.பி.ஐ.எம்., கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஊட்டியில் சேரிங்கிராஸ் தபால் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.பி.ஐ.எம்., தாலுகா செயலாளர் நவீன்சந்திரன் தலைமை வகித்தார்.
சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் போஜராஜ் முன்னிலை வகித்தார். இதில், 18 பேர் கைது செய்யப்பட்டனர். குன்னுார், 17, கோத்தகிரி, 23, பந்தலுார், 17, எருமாடு, 26 என, 123 பேர் கைது செய்யப்பட்டனர்.