/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடமான் வேட்டையாடிய 13 பேருக்கு சிறை
/
கடமான் வேட்டையாடிய 13 பேருக்கு சிறை
ADDED : ஆக 29, 2024 02:53 AM

கோத்தகிரி: கோத்தகிரியில் கடமானை வேட்டையாடிய, 13 பேர் கைது செய்யப்பட்டனர்
ஈரோடு மாவட்டம், ஆசனுாரை சேர்ந்த சிலர், கோத்தகிரி மார்வளா எஸ்டேட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
அவர்களில் பொம்மன் என்பவர், நேற்று முன்தினம் இரவு, ஆசனுாருக்கு சத்தியமங்கலம் வழியாக பஸ்சில் சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், பொம்மன் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், கடமான் இறைச்சி இருந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்ததில், கோத்தகிரியில் கடமான் வேட்டையாடியதை, அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொம்பன் கைது செய்யப்பட்டு, கட்டபெட்டு வனசரகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவுப்படி, வனத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், பொம்மனுடன் சேர்ந்து, அர்ஜூனன், அழகன், ஜெடையசாமி, ஆட்டுகுமார், ஜான்பிரகாஷ், சின்னப்பன், மாதப்பன், மேஸ்திரி குமார், சந்தோஷ், ஜார்ஜ், பசவன், சடையபெருமாள், குமார் மற்றும் கிரிபந்தன் ஆகியோர், கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
நேற்று அவர்கள் கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வனிதா, வயது மூப்பு காரணமாக, அழகன் மற்றும் குமார் ஆகியோரை விடுவித்து, மற்ற, 13 பேரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

