/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு மகளிர் கல்லூரியில் நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு
/
அரசு மகளிர் கல்லூரியில் நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு
அரசு மகளிர் கல்லூரியில் நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு
அரசு மகளிர் கல்லூரியில் நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 26, 2024 10:32 PM
கோவை : கோவை, புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் 2024---25ம் கல்வியாண்டின், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு, நடைபெற்றது. இதன் மூலம், 240 இடங்களில் இதுவரை 160 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
80 காலி இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடைபெறுகிறது. கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மாணவிகள், இணையவழியில் விண்ணப்பித்த மாணவியர் சேர்க்கை விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப நகல், பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, குடும்ப வருமானச் சான்றிதழ், என 2 காப்பிகள் கொண்டு வர வேண்டும்.
மேலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு முழுவதும் அரசு விதிகளுக்கு உட்பட்ட இனசுழற்சி முறை, மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும். மாணவியர் கலந்தாய்விற்கு வரும்போது தங்கள் பெற்றோரை தவறாது உடன் அழைத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் வீரமணி தெரிவித்துள்ளார்.