/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் 3,391 பேருக்கு... நான்கு கட்ட பயிற்சி!கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து அறிவுரை
/
லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் 3,391 பேருக்கு... நான்கு கட்ட பயிற்சி!கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து அறிவுரை
லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் 3,391 பேருக்கு... நான்கு கட்ட பயிற்சி!கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து அறிவுரை
லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் 3,391 பேருக்கு... நான்கு கட்ட பயிற்சி!கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து அறிவுரை
ADDED : மார் 25, 2024 12:26 AM
ஊட்டி;நீலகிரி லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும், 3,391 பேருக்கு தேர்தல் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்து நான்கு கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி லோக்சபா தொகுதி, ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவினாசி, பவானி சாகர் ஆகிய 6 தொகுதிகளை கொண்டதாகும். இங்கு, '6 லட்சத்து 83 ஆயிரத்து 21 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 35 ஆயிரத்து 797 பெண் வாக்காளர்கள், 97 மூன்றாம் பாலினத்தவர்கள்,' என, 14 லட்சத்து 18 ஆயிரத்து 914 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
3391 பேருக்கு தேர்தல் பணி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 'ஊட்டி தொகுதியில், 92 ஆயிரத்து 813 ஆண், 1 லட்சத்து ஆயிரத்து 431 பெண், 12 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம், 1 லட்சத்து 94 ஆயிரத்து 256 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
'கூடலுார் தொகுதியில், 92 ஆயிரத்து 892 ஆண், 98 ஆயிரத்து 718 பெண், 4 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம், 1 லட்சத்து 91 ஆயிரத்து 614 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குன்னுார் தொகுதியில், '88 ஆயிரத்து 792 ஆண், 98 ஆயிரத்து 958 பெண், 4 மூன்றாம் பாலினத்தவர்,' என, 1 லட்சத்து 87 ஆயிரத்து 754 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளில், 689 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 'தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு கணினியில் சுழற்சி முறையில் ஓட்டு சாவடி அலுவலர்கள், ஓட்டுசாவடி நிலை அலுவலர்கள், நிலை 1,2,3 மற்றும் 4 ஆகிய பணிகளில் ஈடுபடுபவர்கள்,' என, மொத்தம், 3,391 பேருக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
நான்கு கட்டமாக பயிற்சி
தேர்தல் ஓட்டுப்பதிவு பணியின் போது, ஓட்டுசாவடிகளில் பணியாற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நியமிக்கின்றனர். பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒவ்வொரு ஓட்டு சாவடியிலும் ஓட்டுச்சாவடி முதன்மை அலுவலர், வாக்காளர் பெயர் மற்றும் அடையாளம் சரி பார்ப்பு பணி, கையொப்பம் பெற்று பதிவு செய்யும் பணி, அழியாத மை வைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கான பயிற்சி நான்கு கட்டமாக நடத்த தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதில், ஊட்டி, குன்னுார், கூடலுார் பகுதிகளில், முதற்கட்ட பயிற்சி, மார்ச் 24 ம் தேதி முடிந்தது.
இரண்டாம் கட்ட பயிற்சி, ஏப்., 7 ம் தேதி; மூன்றாம் கட்ட பயிற்சி, 14 ம் தேதி; நான்காம் கட்ட பயிற்சி, 18 ம் தேதி நடக்கிறது.
இம்முறை, 19 ம் தேதி ஓட்டு பதிவு நடக்கும் நாளில், அந்தந்த மையங்களில் நியமிக்கப்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்கள் மூலம் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

