ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் 36 வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் 36 வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 06, 2026 07:23 PM
ஊட்டி: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 36வது பட்டமளிப்பு விழா கல்லுாரி கலையரங்கில் நடந்தது.
விழாவிற்கு, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் சிவக்குமார் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக, ஊட்டி, ‘ஜீவன் டே கேர்’ சென்டரின் கண் மருத்துவம் மற்றும் பொது அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் சுரேஷ் பாபு பங்கேற்று முதுநிலை, இளநிலை வணிகவியல் மற்றும் மேலாண்மை பிரிவு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கி பேசினார்.
விழாவில், 1,696 இளநிலை மற்றும் 352 முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மொத்தம், 2,048 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். ஏற்பாடுகளை,கல்லுாரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார் செய்திருந்தனர்.
