/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விலை உயர்ந்தும் விற்பனை சரிவு 4.27 கோடி ரூபாய் வீழ்ச்சி
/
விலை உயர்ந்தும் விற்பனை சரிவு 4.27 கோடி ரூபாய் வீழ்ச்சி
விலை உயர்ந்தும் விற்பனை சரிவு 4.27 கோடி ரூபாய் வீழ்ச்சி
விலை உயர்ந்தும் விற்பனை சரிவு 4.27 கோடி ரூபாய் வீழ்ச்சி
ADDED : செப் 09, 2024 09:50 AM
குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலத்தில் சராசரி விலை உயர்ந்த போதும், விற்பனை சரிந்து, ஒரே வாரத்தில், 4.27 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.
குன்னுார் ஏல மையத்தில், 35வது ஏலம் நடந்தது. அதில், '14.28 லட்சம் இலை ரகம்; 3.35 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 17.63 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. '12.54 லட்சம் கிலோ இலை ரகம், 3.23 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 15.79 லட்சம் கிலோ விற்றது. மொத்த வருமானம், 20.95 கோடி ரூபாய் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 132.83 ரூபாய் என இருந்தது.
கடந்த, 34வது ஏலத்தை ஒப்பிடுகையில், 3.56 லட்சம் கிலோ வரத்து குறைந்தது. 4.27 கோடி ரூபாய் மொத்த வருமானமும் குறைந்தது; அதே நேரத்தில் சராசரி விலையில் கிலோவுக்கு, 10 ரூபாய் வரை ஏற்றம் கண்டது.
கொச்சி ஏல மையத்தில், 7.38 லட்சம் கிலோ வரத்து இருந்ததில், 7.18 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை, 166.93 ரூபாயாக இருந்தது. கோவை ஏல மையத்தில், 3.10 லட்சம் கிலோ வரத்து இருந்ததில், 3.07 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை, 139.88 ரூபாயாக இருந்தது.
'டீசர்வ்' ஏலத்தில், 1.70 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 100 சதவீதம் விற்றது. சராசரி விலை, 116.50 ரூபாயாக இருந்தது. மற்ற ஏல மையங்களை விட டீசர்வ் ஏலத்தில் சராசரி விலை மிகவும் குறைவாக இருந்தது.