/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 70.93 % பொள்ளாச்சியில் 71.07%
/
நீலகிரியில் 70.93 % பொள்ளாச்சியில் 71.07%
ADDED : ஏப் 19, 2024 11:38 PM
ஊட்டி;நீலகிரி லோக்சபா தொகுதியில், 70.93 சதவீத ஓட்டுப்பதிவானது.
நீலகிரி லோக்சபா தொகுதியில் பாவானி சாகர், 76.08; ஊட்டி 67.25; கூடலுார் 67.05; குன்னுார் 66.61; மேட்டுப்பாளையம் 72.28; அவிநாசி 72.08 சதவீதமாக பதிவாகி உள்ளது. மொத்தம், ஆறு தொகுதியில், 70.93 சதவீதம் ஓட்டு சதவீதம் பதிவாகியுள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில, 71.07 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. தொண்டாமுத்துார் சட்டசபையில், 67.97 சதவீதம்; கிணத்துக்கடவு - 68.17, பொள்ளாச்சி - 74.28, வால்பாறை - 70.58, உடுமலை - 72.36, மடத்துக்குளம் - 73.03 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. மொத்தம், 71.07 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தன.
'சீல்' வைப்பு
பொள்ளாச்சி தொகுதியில், ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், முகவர்கள் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு பாதுகாப்பாக, 'பேக்கிங்' செய்யப்பட்டு, ஓட்டு எண்ணும் மையமான, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

