/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இருதரப்பினர் இடையே தகராறு; கார் ஏற்றியதில் ஒருவர் பலி
/
இருதரப்பினர் இடையே தகராறு; கார் ஏற்றியதில் ஒருவர் பலி
இருதரப்பினர் இடையே தகராறு; கார் ஏற்றியதில் ஒருவர் பலி
இருதரப்பினர் இடையே தகராறு; கார் ஏற்றியதில் ஒருவர் பலி
ADDED : ஏப் 23, 2024 10:30 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வியூ பாயிண்ட் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், காரை மூன்று பேர் மீது ஏற்றியதில் ஒருவர் பலியானர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கஸ்தூரிபாளையத்தை சேர்ந்தவர் பாண்டி, 28. தச்சுவேலை செய்து வருகிறார்.
இவரது நண்பர்கள் அருள்குமார், 24, மற்றும் வசந்தகுமார், 25. இவர்கள் மூன்று பேரும் ஸ்கூட்டரில் நேற்று முன் தினம் இரவு, மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வீயூ பாயிண்டிற்கு சென்றனர். அப்போது அங்கு, இவர்கள் மூவருக்கும், காரில் வந்த ஒரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறை அவ்வழியாக சென்றவர்கள், சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் ஸ்கூட்டரில் மேட்டுப்பாளையம் நோக்கி கிளம்பினர். அப்போது சாலையில் யானை நின்று கொண்டிருந்ததால், ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தினர்.
பின்னால் காரில் வந்த, தகராறில் ஈடுபட்ட கும்பல், மீண்டும் பாண்டி மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் காரை பாண்டி மற்றும் அவரது நண்பர்களான அருள்குமார், வசந்தகுமார் மீது ஏற்றிவிட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
இதில் பலத்த காயம் அடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருள்குமார், வசந்தகுமார் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

