/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலக்காடு அருகே கிணறு சுத்தம் செய்த தொழிலாளி பரிதாப பலி
/
பாலக்காடு அருகே கிணறு சுத்தம் செய்த தொழிலாளி பரிதாப பலி
பாலக்காடு அருகே கிணறு சுத்தம் செய்த தொழிலாளி பரிதாப பலி
பாலக்காடு அருகே கிணறு சுத்தம் செய்த தொழிலாளி பரிதாப பலி
ADDED : ஏப் 16, 2024 12:46 AM

பாலக்காடு:பாலக்காடு அருகே, கிணறு சுத்தம் செய்த போது, மண்ணுக்குள் சிக்கி, தொழிலாளி பலியானார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், குழல்மந்தம் பெரும்குன்னம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 37, கூலித் தொழிலாளி. இந்நிலையில், இவர் ஐந்து பெண்களுடன் தேங்குறுச்சி என்னுமிடத்தில் கிணறு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
கிணறுக்குள் இறங்கி வேலை பார்த்த போது, பெண்கள் மேல் பகுதியில் இருந்தனர். அப்போது, சிறிய அளவில் மண் இடிந்து விழ தொடங்கியது. அப்போது, சுரேஷ், கிணற்றினுள் மண் இடிபாட்டில் சிக்கிக்கொண்டார். பாறைகளும் சுரேஷின் மீது விழுந்தன.
இதில், அவர் சம்பவ இடத்திலயே இறந்தார். தகவல் அறிந்து வந்த ஊர் மக்களும், பாலக்காடு டவுன் தெற்கு போலீசாரும், நீண்ட நேர போராட்டத்துக்கு பின், சுரேஷின் உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பின்றி பணி மேற்கொண்டது குறித்து விசாரிக்கின்றனர்.

