/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் கம்பத்தால் ஆபத்து மாற்றி அமைக்க கோரிக்கை
/
மின் கம்பத்தால் ஆபத்து மாற்றி அமைக்க கோரிக்கை
ADDED : மே 29, 2024 11:40 PM

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே ஜி.என்., மில்ஸ் பிரிவிலிருந்து சுப்பிரமணியம் பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள மின்கம்பத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. அதை மாற்றி அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி, 15 வது வார்டுக்கு உட்பட்ட ஜி.என்., மில்ஸ் ரோட்டை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குடியிருப்புகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
இங்கு சாலையின் ஓரத்தில் இல்லாமல், சற்று தள்ளி உட்புறமாக மூன்று மின் கம்பங்கள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர், மின்கம்பங்களை சாலையின் ஓரமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கோரிக்கை மனு கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.