/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையை கண்காணிக்கும் 'மூன்றாவது கண்' சட்டவிரோத செயல்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு
/
எல்லையை கண்காணிக்கும் 'மூன்றாவது கண்' சட்டவிரோத செயல்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு
எல்லையை கண்காணிக்கும் 'மூன்றாவது கண்' சட்டவிரோத செயல்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு
எல்லையை கண்காணிக்கும் 'மூன்றாவது கண்' சட்டவிரோத செயல்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு
ADDED : செப் 04, 2024 12:57 AM

பெ.நா.பாளையம்;தமிழக, கேரள எல்லையான ஆனைகட்டி உள்ளடக்கிய பகுதிகளை கொண்ட தடாகம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், 36 அதிநவீன கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழக, கேரளா எல்லையான ஆனைகட்டி மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளாவுக்கு உட்பட்ட வனப்பகுதியில், மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு, வாகன சோதனைகள், 24 மணி நேரமும் நடந்து வருகிறது.
ஆனைகட்டி, தடாகம் பகுதிகளில் புற்றீசல் போல ரிசார்ட்கள் வேகமாக உருவாகி வருகின்றன. அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் இந்த ரிசார்டுகளை தேடி வரும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை கண்காணிக்கவும், சட்ட விரோத செயல்கள் நடப்பதை தடுக்கவும், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'தடாகம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், 24 வீரபாண்டி, சின்னதடாகம், பன்னீர் மடை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகள் உள்ளன.
இப்பகுதியில் வாகனங்களை கண்காணித்து, அவற்றின் எண்களை கண்டறியும் ஏ.என்.பி.ஆர்., கேமராக்கள், 36 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உலாவும் நபர்களை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
கடந்த மாதம் பன்னீர்மடையில் பெண்ணிடம் தங்கச் சங்கலியை பறித்துச் சென்ற நபரை கேமரா வாயிலாக அடையாளம் கண்டறிந்து, கேரளாவுக்கு சென்று கைது செய்தோம். அவரிடமிருந்த தங்கச் சங்கலியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இரவு நேரத்தில் ரோந்து செல்லும் போலீசாரின் மொபைல் போனிலும், ஏ.என்.பி.ஆர். கேமரா பதிவுகள் தெரியும்.
இதனால் ஒரு இடத்தில் அசம்பாவிதம் நடந்தால், அதை உடனடியாக கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கலாம்' என்றனர்.