/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிணற்றில் விழுந்த புலி; வலை விரித்து பிடித்த வனத்துறை
/
கிணற்றில் விழுந்த புலி; வலை விரித்து பிடித்த வனத்துறை
கிணற்றில் விழுந்த புலி; வலை விரித்து பிடித்த வனத்துறை
கிணற்றில் விழுந்த புலி; வலை விரித்து பிடித்த வனத்துறை
ADDED : ஏப் 03, 2024 10:25 PM

பந்தலுார் : நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம், சுல்தான் பத்தேரி காக்கநாடு பகுதியில் கிணற்றில் விழுந்த புலியை வலை விரித்து வனத்துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம், சுல்தான் பத்தேரி காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் வீட்டிற்கு தண்ணீர் எடுப்பதற்கு மோட்டார் போட்டுள்ளார்.
ஆனால், தண்ணீர் வராத நிலையில், கிணற்றில் சென்று பார்த்தபோது, கிணற்றினுள் புலி ஒன்று படுத்திருப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, புலியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றினுள் வலையை விரித்து, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிக்கப்பட்ட புலியை பத்தேரி குப்பாடி பகுதியில் உள்ள வனவிலங்கு மீட்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் நேற்று காலை முதல் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து திறந்த நிலையில் உள்ள கிணறுகளில் மேல் மூடி அமைக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வயநாடு சுற்றுப்பு பகுதியில் சமீப காலமாக ஊருக்குள் புலிகள் வருவது அதிகரித்துள்ள நிலையில், தற்போது கிணற்றில் புலி விழுந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

