/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை தாக்கியதில் பழங்குடி மூதாட்டி பலி
/
காட்டு யானை தாக்கியதில் பழங்குடி மூதாட்டி பலி
ADDED : ஆக 21, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜக்கனாரை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட, வெள்ளரிக்கம்பை பகுதி இருளர் பழங்குடியின சமுதாய மூதாட்டி ஜானகி அம்மாள், 60. இவருக்கு, திருமணமான மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.
கூலி வேலை செய்த ஜானகி அம்மாள், நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே வந்த போது, புதர் மறைவில் இருந்த காட்டு யானை திடீரென தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோத்தகிரி வனத்துறையினர், ஜானகி அம்மாள் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சோலுார்மட்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

