/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அலை; நான் வெற்றி பெறுவது நிச்சயம்'
/
'ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அலை; நான் வெற்றி பெறுவது நிச்சயம்'
'ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அலை; நான் வெற்றி பெறுவது நிச்சயம்'
'ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அலை; நான் வெற்றி பெறுவது நிச்சயம்'
ADDED : ஏப் 05, 2024 10:29 PM
ஊட்டி : 'நீலகிரி லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு அலை நிலவுகிறது,' என, அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
ஊட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த, பல ஆண்டுகளாக தி.மு.க.,வை சார்ந்த ராஜா, எந்த திட்டங்களையும் தொகுதியில் செயல்படுத்தவில்லை.
இவர் மீதான எதிர்ப்பு அலை அதிகமாக இருப்பதால், எனது வெற்றி நிச்சயம். மேலும், பா.ஜ., வேட்பாளரும் இணை அமைச்சருமான முருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக, இங்கு பயணம் மேற்கொண்டாலும், எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இதனால், அவர் எனக்கு போட்டியில்லை. நீலகிரி தொகுதியை பொருத்தமட்டில், அ.தி.மு.க., அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதனால், அ.தி.மு.க., வெற்றி பெறும்,'' என்றார்.