/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனத்தை விரட்டிய காட்டு யானை :அச்சமடைந்த சுற்றுலா பயணிகள்
/
வாகனத்தை விரட்டிய காட்டு யானை :அச்சமடைந்த சுற்றுலா பயணிகள்
வாகனத்தை விரட்டிய காட்டு யானை :அச்சமடைந்த சுற்றுலா பயணிகள்
வாகனத்தை விரட்டிய காட்டு யானை :அச்சமடைந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஏப் 02, 2024 01:55 AM

கூடலுார்:முதுமலையிலிருந்து, தொரப்பள்ளிக்குள் நுழைய முயன்ற காட்டு யானையை, தடுக்க முயன்ற வனத்துறை வாகனத்தை விரட்டியதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில், நடப்பாண்டு கோடைக்கு முன்பாக வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
கூடலுாரை ஒட்டிய முதுமலை பகுதியில் உள்ள சில காட்டு யானைகள், இரவில் தொரப்பள்ளி வனச்சோதனை சாவடி, மற்றும் அகழியை கடந்து தொரப்பள்ளி குடியிருப்புக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதம் செய்து, மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:40 மணிக்கு, முதுமலையிலிருந்து மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக, 'சுல்லி கொம்பன்' என அழைக்கப்படும், காட்டு யானை, வன சோதனை சாவடி, வழியாக திருப்பள்ளிக்குள் நுழைய முயன்றது.
வன ஊழியர்கள், விரைந்து செயல்பட்டு வாகனத்தில், ஒலி எழுப்பிய படி அதனை விரட்ட முயன்றனர். யானை அவர்களை, திருப்பி விரட்டியதால், அவ்வழியாக பயணித்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.
எனினும், வன ஊழியர்கள் தைரியமாக யானையை எதிர்கொண்டு அதனை வனத்துக்குள் விரட்டி, கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலையிலிருந்து இரவில், யானைகள் குடியிருப்புக்குள் நுழைவதை தொடர்ந்து கண்காணித்து விரட்டி வருகிறோம். காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்தால் அவைகளுக்கு இடையூறு செய்யாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதனை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

