/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி லோக்சபா தொகுதிக்கு கூடுதலாக 240 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
/
நீலகிரி லோக்சபா தொகுதிக்கு கூடுதலாக 240 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
நீலகிரி லோக்சபா தொகுதிக்கு கூடுதலாக 240 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
நீலகிரி லோக்சபா தொகுதிக்கு கூடுதலாக 240 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : ஏப் 08, 2024 10:14 PM
ஊட்டி:நீலகிரி லோக்சபா தொகுதிக்கு, கூடுதலாக, 240 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மாநிலத்தில் ஏப்., 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள், தேர்தல் ஆணையத்தால் நடந்து வருகிறது.
நீலகிரி (தனி) லோக்சபா தொகுதியில், 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால், கூடுதலாக தேவைப்படும், 240 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஓட்டுப்பதிவு இயந்திரக் கிடங்கில் இருந்து, கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் அனைத்தும், கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாக்க வைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் அனைத்தையும், 'பெல்' நிறுவனத்தின் பொறியாளர்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.