/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அ.தி.மு.க. சார்பில் வயநாடுக்கு உதவி
/
அ.தி.மு.க. சார்பில் வயநாடுக்கு உதவி
ADDED : ஆக 10, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து, குடியிருப்பு மற்றும் உடைமைகளை இழந்த மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவு பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், உடைகள், குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்கள் உள்ளிட்ட பொருட்கள் மூன்று லாரிகளில் எடுத்து செல்லப்பட்டது. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், அம்மா பேரவை கோவை மாவட்ட செயலாளரும் கேரளா பொறுப்பாளருமான நாசர், நிர்வாகிகள் அனுப்கான், ராமமூர்த்தி, ராஜா தங்கவேல் உள்ளிட்டோர் கொண்டு சென்றனர்.

