/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்வியில் அர்ப்பணிப்பு அவசியம் பள்ளி மாணவியருக்கு அறிவுரை
/
கல்வியில் அர்ப்பணிப்பு அவசியம் பள்ளி மாணவியருக்கு அறிவுரை
கல்வியில் அர்ப்பணிப்பு அவசியம் பள்ளி மாணவியருக்கு அறிவுரை
கல்வியில் அர்ப்பணிப்பு அவசியம் பள்ளி மாணவியருக்கு அறிவுரை
ADDED : பிப் 25, 2025 09:58 PM

குன்னுார், ; குன்னுார் செயின்ட் ஜோசப்ஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் உயர்நிலை பள்ளி, 125வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைமை வகித்த, பள்ளியின் முன்னாள் மாணவியான, முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் நிருபமாராவ் பேசுகையில்,''நாம் சிறிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் படித்தாலும், உலக அளவில் சாதிக்கலாம். சாதிக்கும் எண்ணம், அர்ப்பணிப்பு காரணமாக, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, தேசியளவில் அகில இந்திய பட்டியலில் முதலிடம் பிடித்தேன்.
கல்வியே மிகப்பெரிய செல்வம் என்பதை நினைவில் கொண்டு, இளைய தலைமுறையினர் அர்ப்பணிப்புடன் பயின்று சாதிக்க வேண்டும்,'' என்றார்.
பள்ளி முதல்வர் அலெக்ஸ் ராணி பேசுகையில், ''மகளிருக்கு, 125 ஆண்டுகளாக இந்த பள்ளி கல்வி சேவையாற்றி வருகிறது. அப்போதிருந்து, இங்கு பயின்ற மாணவியர், சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர். பள்ளியின் முதல் இந்திய மாணவி அக்கம்மா தேவி பிறகு, எம்.பி., ஆக தேர்வு பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்,'' என்றார்.
விழாவில், மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சாதனை புரிந்த மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டு முழுவதும் பவள விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.