/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொழுதுபோக்கை தவிர்த்து படிக்க வேண்டும் மாணவியருக்கு 'அட்வைஸ்'
/
பொழுதுபோக்கை தவிர்த்து படிக்க வேண்டும் மாணவியருக்கு 'அட்வைஸ்'
பொழுதுபோக்கை தவிர்த்து படிக்க வேண்டும் மாணவியருக்கு 'அட்வைஸ்'
பொழுதுபோக்கை தவிர்த்து படிக்க வேண்டும் மாணவியருக்கு 'அட்வைஸ்'
ADDED : ஆக 29, 2024 02:52 AM

குன்னுார்: குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரி வரலாற்று துறை, மகளிர் படிப்பு மையம், அரசு லாலி மருத்துவமனை, 'சிட்சா' அமைப்பு சார்பில், மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்ட மனநல திட்ட உளவியலாளர் அல்லி ராணி, லாலி அரசு மருத்துவமனை ஆலோசகர்கள் ஜோசப், ஜெபராஜ், 'சிட்சா' அமைப்பு அருட்சகோதரி சந்தியா ஆகியோர் பேசினர்.
ஊட்டச்சத்து, சுகாதாரம், மனநலம், வளர் இளம் பருவ பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், மொபைல் பயன்பாட்டு, வரம்புகளை எவ்வாறு கடைப்பிடிப்பது, பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர்.
போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. 'மாணவியர் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மற்ற பொழுது போக்கு அம்சங்களை தவிர்த்தால் எதிர்காலத்தில் சிறந்த விளங்கலாம்,' என, அறிவுரை வழங்கப்பட்டது.