/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்ட்டிக்' பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் :அறிவியல் கருத்தரங்கில் மாணவர்களுக்கு அறிவுரை
/
'பிளாஸ்ட்டிக்' பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் :அறிவியல் கருத்தரங்கில் மாணவர்களுக்கு அறிவுரை
'பிளாஸ்ட்டிக்' பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் :அறிவியல் கருத்தரங்கில் மாணவர்களுக்கு அறிவுரை
'பிளாஸ்ட்டிக்' பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் :அறிவியல் கருத்தரங்கில் மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 08, 2024 12:16 AM
ஊட்டி;ஊட்டி நடுவட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வானவில் மன்றத்தின் சார்பாக, அறிவியல் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சகுந்தலா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ ேபசியதாவது:
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த அறிவியல் உண்மையை, அணுகுண்டு உற்பத்திக்கு பயன்படுத்தியது அரசியல்வாதிகள். அது போன்று, நவீன அணுகுண்டு என்று அழைக்கப்படும், 'பிளாஸ்டிக்' பயன்பாடும் நல்ல நோக்கத்துக்கு கணடு பிடிக்கப்பட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.
யானைகளை காத்த கண்டுபிடிப்பு
பிளாஸ்டிக் வருவதற்கு முன், 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய மக்கள் தங்கள், பேனா, பில்லியாட்ஸ் பந்துகள் சிகரெட் ஆஸ்ட்ரே போன்ற பல பொருட்களை உற்பத்தி செய்ய, யானை தந்தங்களை பயன்படுத்தினர்.
அதற்காக, 30 ஆண்டுகளில், 50 லட்சம் யானைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், 1862ல் அலெக்சாண்டர் பார்ஸ் என்ற அறிவியல் அறிஞர் பருத்தி இழைகளையும், தாவர எண்ணெயையும் சேர்த்து, 'பார்க்கின் சைன்' என்ற பாலிமரை உருவாக்கினார். பிறகு, 1907ல் லியோ பாக் லேண்ட் என்ற வேதியியலாளர் பீனால் மற்றும் பார்மால்டி ஹைடு இரண்டையும் இணைத்து, இன்றைய 'பிளாஸ்டிக்கை' கண்டுபிடித்தார். அன்றைய தினத்தில் நெகிழிகள் யானைகளை காக்கும் வரமாகவும், மனிதர்களுக்கு மிகவும் பயன்பட கூடியதாகவும் இருந்தது.
பன்னாட்டு நிறுவனங்களால் பாதிப்பு
இருபதாம் நுாற்றாண்டில் துவங்கிய இந்த பிளாஸ்டிக் யுகம் தற்போது, பூமியின் சுவாச குழாயை அடைத்து கொண்டிருக்கிறது. பூமியின் மேற்பரப்பில், 40 சதவீதம் பிளாஸ்டிக் கழிவால் நிரம்பியுள்ளது. சமுத்திரங்களில், 40 சதவீதம் மேற்பரப்பில் பிளாஸ்டிக்கில் மிதந்து வருகின்றன.
பல பன்னாட்டு வியாபார நிறுவனங்கள், தங்களுடைய லாப வெறியை பெருக்கி கொள்வதற்காக, மக்களை பிளாஸ்டிக் பயன்படுத்தும் மந்தைகளாக மாற்றி விட்டனர்.
தற்போது, பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று பரவலாக குரல் எழுந்தாலும், மக்கள் அதற்கு செவி சாய்ப்பதாக இல்லை. பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
இதன் மூலம், சுற்றுச் சூழலில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.
மேலும், பன்னாட்டு வியாபார நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்தால் மட்டுமே, பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக குறைக்க முடியும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.
முன்னதாக, ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ஆசிரியை ஸ்ரீ வள்ளி நன்றி கூறினார்.