/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்' மாணவர்களுக்கு அறிவுரை
/
'பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்' மாணவர்களுக்கு அறிவுரை
'பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்' மாணவர்களுக்கு அறிவுரை
'பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்' மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : ஆக 27, 2024 02:32 AM

கூடலுார்:'சுற்றுச் சூழலை பாதுகாக்க, மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்,' என, விழிப்புணர்வு முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
நீலகிரி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கூடலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமை படை மாணவர்களுக்கான, பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் மணிவாசகம் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்து, 'உலக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்; அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள்,' குறித்து விளக்கினார்.
'இன்றைய சூழலில் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதின் முக்கியத்துவம், மழைநீர் சேகரிப்பு,'குறித்து, நீலகிரி மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசினார்.
'மேற்கு தொடர்ச்சி மலையில் அழிந்து வரும் தாவரங்களை பாதுகாப்பதன் அவசியம்,' குறித்து தாவர ஆய்வாளர் சுந்தரேசன் விளக்கினார். தொடர்ந்து, கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சங்கர் தலைமையில், 'பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து,' செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

