/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொட்டும் மழையிலும் போர்வையுடன் விவசாய பணி
/
கொட்டும் மழையிலும் போர்வையுடன் விவசாய பணி
ADDED : ஜூன் 11, 2024 01:18 AM

கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் கொட்டும் மழையிலும், 'பிளாஸ்டிக்' போர்வையுடன் தொழிலாளர்கள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக, அதிக பரப்பளவில், கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கி உள்ளிட்ட மலை காய்கறி பயிர் செய்யப்படுகிறது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே, கடன் பெற்று காய்கறி பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை காய்கறி தோட்டங்களுக்கு அனுகூலமாக உள்ளதால், களை எடுத்து உரமிடும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கனமழையில் கடும் குளிரான காலநிலை நிலவுகிறது. இருப்பினும், கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் தொழிலாளர்கள் மழையில் நனையாமல் இருக்க, பிளாஸ்டிக் போர்வையுடன், பீட்ரூட் தோட்டத்தில் களை எடுத்து, பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.