தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு


ADDED : ஜூலை 26, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: -: கோத்தகிரியில் அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.,தோல்வி அடைந்ததை அடுத்து, த.வெ.க., வுக்கு பலர் கட்சித் தாவினர். அவர்களுக்கு பதிலாக, 14 புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் பால நந்தகுமார் பரிந்துரைப்படி, கட்சி தலைமை நியமித்தது.

புதிதாக நியமிக்கப்பட்ட, கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் மாதன், மாவட்ட கழக துணை செயலாளர் எப்பநாடு கண்ணன், மாவட்ட பேரவை செயலாளர் சிவராஜ் பாப்பு, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் சுரேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் வடிவேல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல துணைத் தலைவர் ரங்கநாதன் உட்பட, 14 பேர், கோத்தகிரியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மாவட்ட செயலாளர் பால நந்தகுமார் பேசுகையில், ‘‘கட்சி தோல்விக்கு பிறகு, பணம் சம்பாதிப்பதற்காக, இங்கிருந்து வெளியேறியவர்கள் த.வெ.க.,வில் பதவி வாங்க முடியாது. அவர்கள் வெளியேறிய பிறகுதான் கட்சி தூய்மை அடைந்துள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., 80 சதவீதம் இடங்களில் வெற்றி பெறும். கட்சியினர் ஒருங்கிணைந்து வெற்றிக்கு பாடுபட உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளோம்.’’ என்றார்.

இதில், முன்னாள் எம்.பி., அர்ஜூணன், மாவட்ட அவைத்தலைவர் மணி நகர செயலாளர் நஞ்சு சுப்ரமணி உட்பட, மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us