ADDED : ஜூலை 26, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
பந்தலூர்:
பந்தலூர் அருகே மாங்கம்வயல், புலியாடி, கடலைக் கொல்லி, பெக்கி சுற்றுவட்டார பகுதிகளில், இதுவரை பஸ் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்தப் பகுதிகளுக்கு வாடகை ஆட்டோக்கள் மட்டுமே செல்லும் நிலையில், கூடுதலான கட்டணங்கள் செலுத்தி பழங்குடியின மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முதல் பந்தலூரில் இருந்து உப்பட்டி, பொன்னானி, மாங்கம்வயல், கடலைக் கொல்லி வழியாக பாக்கனா பகுதிக்கு புதிய மினி பஸ் சேவை துவக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பஸ் உரிமையாளர்கள் திவாகர், திலீப்குமார், டிரைவர் சதீஷ், கண்டக்டர் அபிகிருஷ்ணா, கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
