/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 26, 2024 09:58 PM

அன்னுார்: 'போதைப்பொருள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என போலீசார் விழிப்புணர்வு பேரணியில் தெரிவித்தனர்.
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று அன்னுாரில் நடந்தது. அன்னுார்-கோவை ரோட்டில், கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி பள்ளியில் துவங்கி, அன்னுார் பயணியர் மாளிகையில் முடிவடைந்தது.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா பேசுகையில், 'போதைப் பொருள் இருப்பு வைத்துள்ளோர், பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குண்டர் சட்டத்திலும் பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்படுகின்றனர்.
போதைப்பொருள் நடமாட்டம் குறித்து, பொதுமக்கள் அன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு, 94981 01173 என்ற மொபைல் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றார்.
பள்ளி செயலர் பாக்கியலட்சுமி, தலைமை ஆசிரியை ஆண்டாள், என்சி.சி., அலுவலர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.