/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லோக்சபா தேர்தல் :பொது பார்வையாளர்கள் நியமனம்
/
லோக்சபா தேர்தல் :பொது பார்வையாளர்கள் நியமனம்
ADDED : மார் 29, 2024 08:49 PM
ஊட்டி;நீலகிரி லோக்சபா தொகுதிக்கு, தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர் (காவல்) தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர், ஊட்டி, கூடலுார், குன்னுார், மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு, மஞ்சித் சிங் பரார் தேர்தல் செலவின பார்வையாளராகவும்; தேர்தல் பார்வையாளராக (காவல்) மனோஜ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொகுதிகளில் தேர்தல் விதிமீறல் குறித்த புகார்கள் இருப்பின், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், 94899 30725, 63798 52828 என்ற மொபைல் எண்களிலோ, தமிழக அரசு விருந்தினர் மாளிகையில், காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை நேரிலோ தெரிவிக்கலாம்.

