/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவத்தில் பணியாற்றியவர் தற்கொலை; காரணமான மூவருக்கு 3 ஆண்டு சிறை
/
ராணுவத்தில் பணியாற்றியவர் தற்கொலை; காரணமான மூவருக்கு 3 ஆண்டு சிறை
ராணுவத்தில் பணியாற்றியவர் தற்கொலை; காரணமான மூவருக்கு 3 ஆண்டு சிறை
ராணுவத்தில் பணியாற்றியவர் தற்கொலை; காரணமான மூவருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : பிப் 23, 2025 11:43 PM

குன்னுார்; குன்னுாரில் ராணுவ வீரராக பணியாற்றியவர் தற்கொலை செய்ய காரணமான, மூவருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குன்னுார் வெலிங்டன் பாரத் நகரை சேர்ந்த ராணுவ வீரர் நரேந்திரன், 32. கூர்கா ரைபிள் பிரிவில் பணியாற்றி வந்த இவருக்கு, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் கிளார்க் பணி கிடைத்ததால், இங்கு வந்து, மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கடந்த, 2020ம் ஆண்டு செப்.,5ல், இவர் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெலிங்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், 'இவரின் வீட்டின் அருகே வசிக்கும் நித்யா, அவரின் கணவர் கண்ணன், மாமியார் கஸ்துாரி ஆகியோர், ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு சுவர் அமைத்ததால், பேரட்டி ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.
'இதற்கு நரேந்திரனின் தந்தையான, பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீஷ் தான் காரணம்,' என கூறி, மூவரும் தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளனர்.
அதில், நரேந்திரனை மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசி, தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், 'தற்கொலைக்கு மூவரே காரணம்' என, நரேந்திரன் கடிதம் எழுதி வைத்திருந்தார்,'என, தெரியவந்தது.
இதன் பேரில், மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு குன்னுார் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு கூடுதல் வக்கீல் இமாம் வாதாடினார்.
அதில், எஸ்தர் என்கிற நித்யா,35; கண்ணன்,41; கஸ்லுாரி,57, ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் வீதம் அபராதமும் விதித்து, நீதிபதி மேகலா மைதிலி தீர்ப்பு வழங்கினார்.

