/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாழும் கலை ஆனந்த அனுபவ பயிற்சி இன்று துவக்கம்
/
வாழும் கலை ஆனந்த அனுபவ பயிற்சி இன்று துவக்கம்
ADDED : ஆக 26, 2024 12:51 AM
மேட்டுப்பாளையம்;வாழும் கலை பயிற்சியில் எளிய மூச்சுப் பயிற்சி, வாழும் கலை பயிற்சி, உடலையும் உள்ளத்தையும் திடப்படுத்தும் பயிற்சி ஆகிய பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், முதியவர்கள் பங்கேற்கலாம்.
காரமடை அடுத்த மணிகண்டன் நகர் ராயல் கார்டனில் ஸ்ரீ ஸ்ரீ ஹாலில் பயிற்சியானது நடைபெற உள்ளது. இன்று மாலை, 6:00 மணிக்கு பயிற்சியின் அறிமுக உரை இலவசமாக நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கு பெறலாம். 27ம் தேதியிலிருந்து, 31ம் தேதி முடிய ஒரு வாரம் இப்பயிற்சி நடைபெற உள்ளது. காலை, 6:00 மணியிலிருந்து, 8:30 மணி வரையும், 10:00 லிருந்து, 12:30 மணி வரையும், மாலை, 6:00 மணி லிருந்து, இரவு, 8:30 மணி வரை ஆனந்த அனுபவ பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் 94875 98054, 94875 96206 என்ற மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும். இத்தகவலை வாழும் கலை குடும்ப நிர்வாகிகள் தெரிவித்தனர்.