/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயில் 125வது ஆண்டு விழா :ஓவிய போட்டியில் அசத்திய மாணவர்கள்
/
மலை ரயில் 125வது ஆண்டு விழா :ஓவிய போட்டியில் அசத்திய மாணவர்கள்
மலை ரயில் 125வது ஆண்டு விழா :ஓவிய போட்டியில் அசத்திய மாணவர்கள்
மலை ரயில் 125வது ஆண்டு விழா :ஓவிய போட்டியில் அசத்திய மாணவர்கள்
ADDED : ஜூன் 15, 2024 12:35 AM

குன்னுார்;குன்னுார் மலை ரயில் இயக்கம் துவங்கி, 125 வது ஆண்டு விழாவையொட்டி ரயில்வே நிர்வாகம் சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
நீலகிரி மலை ரயில் சேவை கடந்த, 1899ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை துவங்கியது.
125 வது ஆண்டு விழாவையொட்டி ரயில்வே நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. குன்னூர் புல்மார் பள்ளி, மவுண்டன் ஹோம், டிம்பர்டாப்ஸ பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், பசுமை நிறைந்த மலைகளின் இடையே நீல வண்ணத்தில் தவழ்ந்து செல்லும் மலை ரயில், இன்ஜின், குகைகளில் இருந்து வெளிவரும் மலை ரயில், ரயில் நிலையங்கள் பல வண்ணங்களில் வரைந்து அசத்தினர். சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.