தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நெல் வயலில் இறந்து கிடந்த அசாம் மாநில தொழிலாளி

நெல் வயலில் இறந்து கிடந்த அசாம் மாநில தொழிலாளி

நெல் வயலில் இறந்து கிடந்த அசாம் மாநில தொழிலாளி


ADDED : ஜூன் 16, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

​பாலக்காடு: பாலக்காடு அருகே வயலில் இறந்து கிடந்த அசாம் மாநில தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

பாலக்காடு மாவட்டம், மன்னார்க்காடு அருகே உள்ள எடத்தநாட்டுகரை முண்டக்குன்று சாலையில் உள்ள நெல் வயலில், நேற்று காலை ஆண் சடலம் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

வயலில் இருந்து சடலத்தை மீட்ட போலீசார் அப்பகுதியில் விசாரித்தனர். இறந்து கிடந்தது, அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்துல் அஜித்,50, என்பது தெரியவந்தது. இவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் வேலை தேடி பாலக்காட்டிற்கு வந்துள்ளார். இவர் எடத்தநாட்டுகரை, சிரட்டகுளம், ஆலடிப்புறம் பகுதியில் தங்கி வேலை பார்த்துள்ளார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us