UPDATED : ஜூலை 19, 2026 03:20 PM
ADDED : ஜூலை 19, 2026 12:50 PM

பந்தலூர்:பந்தலூரில் நெல்லியாளம் நகர காங்., சார்பில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் எனும் தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
பந்தலூரில் நடந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். நகர தலைவர் ஷாஜி தலைமை வகித்து, லஞ்சத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் மற்றும் ஊழல் மற்றும் லஞ்ச அதிகாரிகளை அடையாளம் காட்ட வேண்டியது அவசியம் குறித்து பேசினார்.
மாநிலச் செயலாளர் அனஸ் எடாலத், லஞ்சம், ஊழலுக்கு எதிராக இளைய தலைமுறையினர் ஒன்றிணைய வேண்டும். என, வலியுறுத்தினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபிநாதன், த.வெ.க. நகர செயலாளர் கற்பக விநாயகம் உள்ளிட்டோர் பேசினார்கள்.
பின், லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், கைரேகை, கையெழுத்துக்கள் வாயிலாக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். உப்பட்டி, தேவாலா பகுதியிலும் நிகழ்ச்சிகள் நடந்தது.
நிர்வாகிகள் ஜெய்சல், பிரபு, முரளி, நாகராஜ், அருணாசலம், ஹாரிஸ், சாபித், சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
