/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்; மாணவ, மாணவியர் ஆர்வம்
/
கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்; மாணவ, மாணவியர் ஆர்வம்
கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்; மாணவ, மாணவியர் ஆர்வம்
கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்; மாணவ, மாணவியர் ஆர்வம்
ADDED : பிப் 21, 2025 10:45 PM

கூடலுார்; கூடலுார் அரசு கல்லுாரியில் போலீஸ் துறை சார்பில், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உதவி பேராசிரியர் மகேஸ்வரர் வரவேற்றார். கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார் தலைமை வகித்து பேசுகையில், ''ஜாதிய வேறுபாடுகளை, கல்வியில் சாதிப்பதால் களைய முடியும். கல்வி பொருளாதாரம் கீழ் தட்டு மக்களுக்கும் கிடைப்பதற்காகவே அரசு, ஜாதி சான்றிதழை வழங்கி வருகிறது.
நமக்கு மனித நேயம் இயற்கையாக இருக்க வேண்டும். மனிதனை, மனிதனாக பார்க்க வேண்டும். இதன் மூலம், எதிர்காலத்தில் சமூக பாகுபாடு இருக்காது,'' என்றார்.
வக்கீல் மலைச்சாமி பேசுகையில், ''பல மொபைல் போன் செயலிகள் நமது, அறிவை திசை திருப்பி, சிந்தனைகளையும், உரிமைகளையும் பறித்து வருகின்றன. இதனை தவிர்க்க வேண்டும். இன்றைய மாணவர்களிடம் ஜாதியை சிந்தனைகள் இல்லை. நமது அறிவை பயன்படுத்தி, கல்வி, சமூக பொருளாதாரத்தில் சாதிக்க முடியும். ஜாதிகளை ஒலிக்க முடியும்,'' என்றார்.
முகாமில், கல்லுாரி முதல்வர் சுபாஷினி, ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் சகாதேவன், அரசு சித்தா டாக்டர் சந்தானம், புள்ளியியல் ஆய்வாளர் குணசீலன், எஸ்.எஸ்.ஐ.,கள் கிருஷ்ணமூர்த்தி, நேரு, ஜான் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

