/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காஸ் சிலிண்டரில் தேர்தல் வில்லைகள் ஒட்டி விழிப்புணர்வு
/
காஸ் சிலிண்டரில் தேர்தல் வில்லைகள் ஒட்டி விழிப்புணர்வு
காஸ் சிலிண்டரில் தேர்தல் வில்லைகள் ஒட்டி விழிப்புணர்வு
காஸ் சிலிண்டரில் தேர்தல் வில்லைகள் ஒட்டி விழிப்புணர்வு
ADDED : ஏப் 02, 2024 10:56 PM

ஊட்டி;ஊட்டியில் காஸ் சிலிண்டர் மற்றும் ஆட்டோகளில் ஓட்டு வில்லைகள் ஒட்டி, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 'அனைவரும் ஓட்டளிப்பதன் அவசியம்' குறித்து, மாவட்டம் முழுவதும், பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, காஸ் சிலிண்டர், பஸ், ஆட்டோக்களுக்கு ஓட்டு வில்லைகள் ஒட்டியும், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வினியோகித்தும், 100 சதவீதம் ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, கலை நிகழ்ச்சி மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர்.

