/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 03, 2024 09:13 PM
குன்னுார் : குன்னுார் பிராவிடன்ஸ் தன்னாட்சி மகளிர் கல்லுாரி வரலாற்று துறை மற்றும் ஊட்டி சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா தலைமை வகித்தார். ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலக சமூக நலத்துறை அதிகாரி குமார், ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
அதில், பெண்கள் குடும்ப வன்முறை முதியோர் இல்லங்கள், போக்சோ சட்டம் போன்றவை குறித்து வலியுறுத்தப்பட்டது. கோத்தகிரி செயின்ட்மேரி மேல்நிலைப்பள்ளி மாணவியர் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை வரலாற்று துறை தலைவர் ஷானிருஸ்கின், உதவி பேராசிரியை சுதா செய்திருந்தனர்.