/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பணை சீரமைப்பு :குடிநீர் வினியோகம் தொடரும்
/
தடுப்பணை சீரமைப்பு :குடிநீர் வினியோகம் தொடரும்
ADDED : ஏப் 23, 2024 02:29 AM

கூடலுார்:கூடலுார், இரும்புபாலம் அருகே, நகராட்சி சார்பில் கிணறு அமைத்து, அதிலிருந்து குழாய் மூலம் கோழிபாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் எடுத்து சென்று, பல வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர்.
கிணற்றுக்கு தேவையான தண்ணீரை, அவ்வழியாக செல்லும் புளியம்பாறை ஆற்றில், சிறிய தடுப்பணை அமைத்து அதிலிருந்து சப்ளை செய்து வருகின்றனர். தடுப்பணை பல இடங்களில் சேதமடைந்து, அதன் வழியாக, தண்ணீர் வெளியேறியது. கோடைகாலம் என்பதால் நீர்வரத்து குறைந்து, குடிநீர் கிணற்றுக்கு தண்ணீர் செல்வது குறைய துவங்கியது.இதற்கு தீர்வு காணும் வகையில், தடுப்பணைக்குள் மண் மூட்டைகள் அடுக்கி, சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'சேதம் அடைந்த தடுப்பணை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. எனினும், குடிநீர் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது,' என்றனர்.

